இஸ்ரேலிய ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டும் மொராக்கோ !!

  • Tamil Defense
  • May 10, 2022
  • Comments Off on இஸ்ரேலிய ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டும் மொராக்கோ !!

மொராக்கோ நாடு இஸ்ரேலின் எல்பிட் நிறுவனம் Elbit Systems தயாரிக்கும் டெலிலா Delilah ரக க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

மொராக்கோ தனது விமானப்படையின் F5 ரக போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்குறிப்பிட்ட Delilah ஏவுகணைகளை பெற விரும்புகிறது இவற்றை பெற்று கொண்டால் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனை மொராக்கோ பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர் மேற்குறிப்பிட்ட F5 போர் விமானங்களில் அதிநவீன AESA radar Avionics, Digital Display, Sensor மற்றும் Jammer கருவிகளும் அதிநவீன தரை மற்றும் வான் இலக்கு ஏவுகணைகளும் இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் மொராக்கோவுக்கும் இடையே ஏற்கனவே நல்ல உறவுகள் நிலவி வரும் நிலையில் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை மென்மேலும் அதிகரிக்கும் என பரவலாக கூறப்படுகிறது.