
சமீபத்தில் இந்திய தரைப்படையின் வடக்கு பிராந்தியத்தின தலைமையகத்தில் North Tech Symposium எனும் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது இதில் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் இந்தியா மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ரீதியில் அமைதியை கடைபிடித்து வருவதாகவும் வலிமையான இடத்தில் இருந்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும் இரு தரப்பு இடையிலான தகவல் தொடர்பு பன்மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் மேலும் இரண்டு தரப்பு வீரர்கள் இடையே உடல்ரீதியான மோதல்களை தவிர்க்கும் பொருட்டு No Physical Contact நடைமுறை அமல்படுத்தபட்டு உள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட North Tech Symposium கருத்தரங்கில் சுமார் 160 க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது புதிய தொழில்நுட்பங்களை காட்சிபடுத்தினர் இவற்றில் பலவற்றை எல்லை கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.