1 min read
இந்திய ராணுவ லாரிகளை வாங்கிய மொராக்கோ !!
மொராக்கோ நாட்டின் தரைப்படை இந்திய தயாரிப்பு ராணுவ லாரிகளை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது டாடா குழுமத்தின் (TATA) தயாரிப்பான LPTA-2038 6×6 லாரிகளில் 619 லாரிகளை தற்போது மொராக்கோ தரைப்படை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே 1239 6×6 லாரிகளையும், LPTA – 715 4×4 ரக TATA தயாரிப்பு லாரிகளையும் மொராக்கோ தரைப்படை பயன்படுத்தி வருவது கூடுதல் சிறப்பாகும்.