ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா நகரத்தில் அம்மாநில சட்டமன்றம் அமைந்துள்ளது கடந்த 9ஆம் தேதி காலை சட்டமன்றத்தின் 1ஆவது நுழைவு வாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன மேலும் சுற்று சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இதனையடுத்து உடனடியாக சட்டமன்ற அலுவலர்கள் காலிஸ்தான் கொடிகளை அவிழ்ததுவிட்டு சுற்று சுவரில் எழுதப்பட்டு இருந்த வாக்கியங்களை அழித்தனர் மேலும் அம்மாநில காவல்துறை மாவிலத்தின் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இந்த சம்பவத்தை கோழைத்தனமான செயல் என கண்டித்ததோடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
ஹிமாச்சல பிரதேச காவல்துறை தலைமை இயக்குனர் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு உஷார் நிலையில் இருக்கும்படியும் பொது இடங்கள், அணைகள் மற்றும் அரசு அலுவலகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும்
மாநில காவல்துறையின் அதிவிரைவு படையணிகள், வெடிகுண்டு செயலிழப்பு அணிகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு அணிகள் ஆகியவை அணைத்தையும் தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.