1 min read
ராணுவ தளவாட உற்பத்தியில் கால்பதிக்கும் ஜின்டால் குழுமம் !!
இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை ஜின்டால் குழமத்திற்கு சொந்தமானது இத்தகைய பெருமைக்குரிய ஜின்டால் குழுமம் ராணுவ தளவாட உற்பத்தியில் கால்பதிக்க உள்ளது.
தற்போது தனது பங்காளி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஜின்டால் குழுமம் ஒரு கவச வாகனத்தை தயாரித்து சோதனை செய்து வருவதாகவும் சோதனைகளில் வெற்றி பெற்றால் அரசின் பார்வைக்கு தெரிவிக்கப்படும் எனவும்
பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று கொண்டு ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் மேற்குறிப்பிட்ட கவச வாகனத்தின் தயாரிப்பு பணிகளை துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.