வெளிநாடுகளுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்ய ஜப்பான் முடிவு !!

ஜப்பானிய அரசு முதல்முறையாக போர் விமானங்கள், ஏவுகணைகள், குண்டு துளைக்கா கவச உடைகள், தலைகவசங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் கொள்கை முடிவை அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியா ஆஸ்திரேலியா வியட்நாம் தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா ஃபிலிப்பைன்ஸ் அமெரிக்கா இங்கிலாந்து ஃபிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி போன்ற 12 நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பான் திட்டமிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் உள்ள அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா போன்ள க்வாட் நாடுகள் மற்றும் இந்தோனேசியா ஃபிலிப்பைன்ஸ் வியட்னாம் போன்ற நாடுகள் சீனாவுடன் எல்லை பிரச்சினையை சந்திக்கும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு தாக்குதல் நடத்த உதவும் ஆயுத அமைப்புகளையும் அதன் மூலம் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவும் அதே நேரத்தில் பிற நாடுகளுக்கு தலைகவசங்கள் மற்றும் கவச உடைகள் போன்ற தற்காப்பு உடைகளை ஏற்றுமதி செய்யவும் ஜப்பான் விரும்புகிறது.

இதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுடன் ஜப்பானுடைய உறவுகளை மேம்படுத்தவும் முடியும் என்பது ஜப்பான் அரசின் எண்ணமாக உள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜப்பான் சில விதிமுறைகளை தளர்வித்து ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுபாட்டு ரேடார் அமைப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.