விண்வெளியில் மோதல்களை தடுக்க ISRO மற்றும் CUHP இடையில் ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • May 7, 2022
  • Comments Off on விண்வெளியில் மோதல்களை தடுக்க ISRO மற்றும் CUHP இடையில் ஒப்பந்தம் !!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO மற்றும் ஹிமாச்சல பிரதேச மத்திய பல்கலைகழகம் CUHP ஆகியவற்றிற்கு இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

அதாவது விண்வெளியில் நாள்தோறும் காலாவதியான செயற்கைகோள்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது அந்த வகையில் அவற்றால் செயல்பாட்டில் உள்ள செயற்கைகோள்களுக்கும் ஆபத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றால் மிகையல்ல.

ஆகவே இத்தகைய நிகழ்வுகளை தடுக்க Space Situational Awareness SSA எனப்படும் விண்வெளி சூழல் கண்காணிப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் விண் இயற்பியல் ஆகிய திட்டங்களில் இணைந்து செயலாற்ற ISRO மற்றும் CUHP ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் இஸ்ரோ அமைப்பின் அறிவியல் செயலாளர் ஷாந்தனு பதாவ்டேகர் மற்றும் ஹிமாச்சல பிரதேச மத்திய பல்கலைகழகத்தின் இணைவேந்தர் சத் பிராரஷ் பன்சால் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் ISRO மற்றும் CUHP ஆகியவை கூட்டாக Deep Space Exploration, Ground based sensor for space object tracking, NEO R&D போன்றவற்றிற்கான மையங்களை அமைக்க வழிவகுக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.