
இந்த மாதம் துவங்கி சுமார் ஒரு மாத காலத்திற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தும் ரீதியிலான போர் ஒத்திகை ஒன்றை இஸ்ரேல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த போர் ஒத்திகைக்கு Chariots of Fire எனும் பெயரை இஸ்ரேலிய விமானப்படை சூட்டி உள்ளது, இத்தகைய போர் ஒத்திகை ஒன்றை இஸ்ரேல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஒத்திகையின் போது இஸ்ரேல் மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரானிய அணு உலைகளை தாக்குவது போன்று கடைசி இரண்டு வாரங்களுக்கு ஒத்திகை நடத்த உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது பற்றி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் பேசும்போது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்திய பின் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டிய நிலை உள்ளது
இன்னும் ஒரு சில வாரங்களில் ஈரான் ஒரு அணுகுண்டை உருவாக்க தேவையான செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பெற்றுவிட உள்ளதாகவும் ஆகவே ஈரானை தடுக்கும் நடவடிக்கைகள் அவசியமானது எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இஸ்ரேலிய கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி ஈரானை தாக்குவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக வெளி உலகிற்கு அறிவித்தது கூடுதல் தகவல் ஆகும்.