பல முனை போருக்கு தயாராகும் இஸ்ரேலிய முப்படைகள் !!
1 min read

பல முனை போருக்கு தயாராகும் இஸ்ரேலிய முப்படைகள் !!

இஸ்ரேலிய ராணுவம் பல முனை போருக்கு தயாராகும் வண்ணம் மிகப்பெரிய போர் ஒத்திகை ஒன்றில் ஈடுபட்டுள்ளது வருகிற ஜூன் 3ஆம் தேதி வரை இது நடைபெறும் என தெரிகிறது.

ஒரே நேரத்தில் சுமார் 80க்கும் அதிகமான இடங்களில் தாக்குதல் நடைபெற்றதை போல பாவித்தும் இஸ்ரேலின் அனைத்து எல்லைகளையும் பாதுகாப்பது போலவும் இந்த பயிற்சிகள் நடைபெறுவதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர லெபனான் நாட்டில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புடன் போர் மூன்டால் ஒரே நாளில் இஸ்ரேலை நோக்கி 1500 ராக்கெட்டுகள் ஏவப்படலாம் எனவும்

அதனை தொடர்ந்து இஸ்ரேலிய வான் பரப்பை பாதுகாப்பது அதையும் தாண்டி ஏற்படும் சேதங்களை சமாளிப்பது பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த 1,50,000 ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.