மேலதிக K9 VAJRA தானியங்கி பிரங்கிகளை வாங்க பரிசீலனை ??
1 min read

மேலதிக K9 VAJRA தானியங்கி பிரங்கிகளை வாங்க பரிசீலனை ??

தென்கொரியாவின் Hanwha நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவின் Larsen & Toubro நிறுவனம் குஜராத்தில் உள்ள ஹசீரா தொழிற்சாலையில் K9 VAJRA தானியங்கி பிரங்கிகளை தயாரித்து வழங்கியது.

அந்த வகையில் முதல் தொகுதியில் சுமார் 100 K9 VAJRA பிரங்கிகள் இந்திய தரைப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன, இவை இந்திய தரைப்படைக்கு மிகுந்த திருப்தியை அளித்தன குறிப்பாக கல்வானுக்கு பிறகு அதிக உயர பகுதியான லடாக்கில் களமிறக்கப்பட்ட இந்த தானியங்கி பிரங்கிகள் அங்கும் மிக சிறப்பாக செயல்ப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த முறை பாதுகாப்பு துறை செயலாளர் முனைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெறும் உயர்மட்ட பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மேலும் அதிகமாக சுமார் 100 K9 VAJRA தானியங்கி பிரங்கிகளை வாங்கும் திட்டம் ஆலோசித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அதிகமாக இந்த வகை பிரங்கிகள் ஆர்டர் செய்யப்பட்டால் இந்த முறை சோதனைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதும் இத்தகைய 100 பிரங்கிகள் 5 ரெஜிமென்ட்களுக்கு போதுமானவையாகும் ஆகவே ஏற்கனவே 5 ரெஜிமென்டகள் இனி ஆர்டர் கொடுக்கப்பட்டால் 5 ரெஜிமென்ட்கள் என ஒட்டுமொத்தமாக சுமார் 10 K9 VAJRA ரெஜிமென்ட்கள் இந்திய தரைப்படையில் இருக்கும்.

மேலும் இத்தகைய 100 K9 VAJRA பிரங்கிகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அரசு சுமார் 5,500 கோடி ருபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலில் பாதுகாப்பு செயலாளர் தவிர முப்படைகளின் துணை தளபதிகள் மற்றும் ஒரு மூத்த DRDO விஞ்ஞானி ஆகியோர் இருப்பர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.