இரண்டாம் தொகுதி Sig716 துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு !!

  • Tamil Defense
  • May 23, 2022
  • Comments Off on இரண்டாம் தொகுதி Sig716 துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 73,000 Sig716 துப்பாக்கிகளை அமெரிக்காவில் இருந்து வாங்க ஆர்டர் கொடுக்க உள்ளதாக நம்பத்தகுந்த பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய தயாரிப்பு தோட்டாக்களால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டாம் தொகுதி Sig716 துப்பாக்கிகளை வாங்கும் முடிவை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கைவிட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய தரைப்படையின் 400 காலாட்படை பட்டலாலியன்களில் குறைந்தபட்சம் இரண்டு கம்பனிகளுக்கு (ஏறத்தாழ 200 வீரர்கள்) இந்த Sig716 துப்பாக்கிகள் வழங்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு இந்திய தரைப்படைக்கு 66,400 துப்பாக்கிகள், இந்திய விமானப்படைக்கு 4000 துப்பாக்கிகள் மற்றும் இந்திய கடற்படைக்கு 2000 துப்பாக்கிகள் என ஒட்டுமொத்தமாக 72400 துப்பாக்கிகள் முதல் தொகுதியில் வாங்கப்பட்டன.

ரஷ்யாவின் AK47-47 மற்றும் AK-203 (7.62×39mm) காலிபர் கொண்டவை, இந்தியாவின் INSAS (5.56×51mm) காலிபர் திறனை கொண்டது ஆனால் Sig716 (7.62×51mm) எனும் அதிக காலிபர் திறனை கொண்டதாகும் அதனால் தான் இந்திய தரைப்படை இதன்மீது அதிக நாட்டம் காட்டுகிறது என்றால் மிகையல்ல.