நாட்டின் முதலாவது மருத்துவமனை கப்பலுக்கான அறிவிக்கையை வெளியிட்ட இந்திய கடற்படை !!
இந்திய கடற்படை நமது நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக மருத்துவமனை கப்பல் ஒன்றை கட்டுவதற்கான அறிவிக்கையை இந்திய கப்பல் கட்டுமான தளங்களுக்கென வெளியிட்டு உள்ளது.
இந்த கப்பலில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும், 117 மருத்துவ பணியாளர்கள் இருப்பர் அதிகபட்சமாக 600 பேர் வரை இந்த கப்பலில் பயணிக்க முடியும் ஆகவே SRtP விதிகளுக்கேற்ப இந்த கப்பல் கட்டப்பட வேண்டும்.
15,000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பலில் 15 அதிகாரிகள், 120 மாலுமிகளும் மருத்துவ பிரிவில் 22 அதிகாரிகள், 14 ராணுவ செவிலியர் அதிகாரிகள் மற்றும் 81 மருத்துவ உதவியாளர்கள் இருப்பர்.
2 டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கொண்ட இந்த கப்பல் அதிகபட்சமாக சுமார் 18 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் மேலும் 12 நாட்ஸ் வேகத்தில் சுமார் 4000 கடல் மைல்கள் தொலைவு பயணிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் “கடல் நிலை – 6” எனப்படும் அதிக மோசமான சூழல்களிலும் பயணிக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட உள்ளதாகவும், முழுவதும் வெள்ளை நிறத்தில் கப்பலின் பக்கவாட்டிலும் மேல்பகுதியிலும் சிகப்பு cross காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலை இந்திய.கடற்படையானது தேசிய மருத்துவமனை கப்பல் என அழைப்பது கூடுதல் தகவல் ஆகும்.