மொரிஷியஸ் நாட்டில் இந்திய கடற்படை தளத்தில் P8 விமானங்கள் இறங்கும் வசதி சீனாவுக்கு அடுத்த செக் !!

  • Tamil Defense
  • May 16, 2022
  • Comments Off on மொரிஷியஸ் நாட்டில் இந்திய கடற்படை தளத்தில் P8 விமானங்கள் இறங்கும் வசதி சீனாவுக்கு அடுத்த செக் !!

இந்தியா மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தனது இருப்பை வலுப்படுத்தும் விதமாக மொரிஷியஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அதாவது மொரிஷியஸ் நிலப்பரப்பில் இருந்து 1100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகலேகா தீவில் மிகப்பெரிய ராணுவ தளம் ஒன்றை கட்டமைத்து வருகிறது.

இங்கு ஒரு 10,000 அடி நீள விமான ஒடுபாதை மற்றும் கப்பல்கள் வந்து நிற்க கூடிய தளம், வீரர்களுக்கான தங்கும் வசதிகள் என பெரிய ராணுவ தளம் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவால் கட்டப்பட்டு வருகிறது, தற்போது வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக இந்தியாவின் P8 கடல்சார் தொலைதூர கண்காணிப்பு, கப்பல் மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களும் அங்கிருந்து இயங்க முடியும் என தெரிய வந்துள்ளது.

அதாவது மிக பெரிய விமான ஒடுபாதை மற்றும் P8 போன்ற பெரிய விமானங்களை நிறுத்தும் அளவிலான HANGAR எனப்பட கூடிய மிகப்பெரிய கட்டுமானங்கள் காணப்படுகின்றன இவை சுமார் 123 அடி நீளமும் 126 அடி அகலமும் கொண்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மூலோபாய மற்றும் சர்வதேச படிப்பினைகள் மையம் (Center for Strategic & International Studies) தெரிவித்துள்ளது.

இந்தியா அகலேகா தீவில் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒரு விமான தளம், கடற்படை தளம் மற்றும் தகவல் தொடர்பு கண்காணிப்பு மையம் ஆகியவற்றை கட்டமைத்து வருவதும் ஆரம்ப கட்டத்தில் இரண்டு நாடுகளும் இதுபற்றிய தகவல்கள் வெளியான போது அப்படி எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய பெருங்கடலின் மேற்கு கரையோரம் உள்ள ஜீபூட்டி நாட்டில் சீனா ராணுவ தளம் ஒன்றை அமைத்துள்ள நிலையில் சீனாவுக்கு அந்த பிராந்தியத்தில் நேரடியாக செக் வைக்கும் நகர்வாகவே இந்தியாவின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.