இந்தியா ECWCS – Extreme Cold Weather Clothing systems எனப்படும் அதிக குளிர் பிரதேச உடைகள் மற்றும் பூட்ஸ்களை நீண்ட காலமாகவே வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது .
இந்த நிலையில் AROO எனப்படும் இந்திய தனியார் நிறுவனம் ஒன்று இத்தகைய பொருட்களை தயாரித்து வருகிறது தற்போது இந்த நிறுவன தயாரிப்புகளை இந்திய தரைப்படை வாங்கி பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ECWCS என்பது மூன்றடுக்கு உடையாகும் இவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அணிய வேண்டும் இதன் காரணமாக தான் சுமார் மைனஸ் 50 டிகிர குளிரிலும் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது, அதிக உயர்ந்த பகுதிகள் குறிப்பாக சியாச்சினில் இவை அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.
தற்போது AROO நிறுவனம் 41,000 ECWCS உடைகளை டெலிவரி செய்துள்ளதாகவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடைகளை விடவும் 20% முதல் 75% வரை சிறப்பாக இருப்பதாகவும் மேலதிக ECWCS உடைகளை ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது இனி சுவிட்சர்லாந்து இலங்கை வியட்நாம் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனும் நிலை உருவாகி உள்ளது.
AROO நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மூனிஷ் ஹிந்துஜா கூறும்போது தங்களது பொருட்கள் இறக்குமதி பொருட்களை விடவும் விலை மலிவானது அதிக தரமானது எனவும் இத்தகைய அடுத்த தலைமுறை உடைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூடவே மைனஸ் 30 டிகிரி குளிரையும் தாங்கும் கால்சட்டை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனமானது வடிவமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் பின்னர் கூட்டு தயாரிப்பு முறையில் தொழில்நுட்பத்தை மற்றொரு நிறுவனத்துடன் பகிரந்து தயாரிக்கும் ஆகவே IP உரிமைகள் அடிப்படையில் இந்த நிறுவனம் வருமானம் ஈட்டி வருவது கூடுதல் தகவல் ஆகும்.