ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் துறையினரை அதிகளவில் ஈடுபட வைக்க முயலும் பாதுகாப்பு அமைச்சகம் !!
1 min read

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் துறையினரை அதிகளவில் ஈடுபட வைக்க முயலும் பாதுகாப்பு அமைச்சகம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தனியார் துறையினர் அதிகளவில் தயாரிக்குமாறும் அதில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய விமானப்படை தனியார் துறையினரிடம் Apache மற்றும் Chinook ஹெலிகாப்டர்களுக்கான Simulator மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு விதமான ராணுவ தளவாடங்களை தயாரித்து தருமாறு அணுகி உள்ளது.

ஒரு வலைதள கருத்தரங்கை இந்திய விமானப்படை நடத்தியது அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன அந்த கருத்தரங்கில் தான் இந்திய விமானப்படை இத்தகைய கோரிக்கையை பதிலை எதிர்பார்த்து தனியார் துறையினரிடம் முன்வைத்துள்ளது.

இவை தவிர இந்திய தரைப்படைக்கான இலகுரக டாங்கி, தானியங்கி சண்டை வாகனம், ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் இலக்கை அடையாளம் காணும் அமைப்பு ஆகியற்றையும் தயாரிக்கும் திட்டவரைவுகளும் இந்திய தனியார் துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவையனைத்துமே இந்தியாவின் ஆயுத இறக்குமதிகளை பன்மடங்கு குறைக்கும் வகையிலானவை ஆகும் அரசுத்துறை நிறுவனங்கள் ஆயுத தயாரிப்பில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் நிலையில் தனியார் நிறுவனங்களையும் இதில் ஈடுபட இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.