இரண்டாவது சுதேசி ஹெலிகாப்டர் படையணியை உருவாக்கிய இந்திய கடலோர காவல்படை !!

  • Tamil Defense
  • May 7, 2022
  • Comments Off on இரண்டாவது சுதேசி ஹெலிகாப்டர் படையணியை உருவாக்கிய இந்திய கடலோர காவல்படை !!

இந்திய கடலோர காவல்படையானது கொச்சியில் உள்ள தளத்தில் தனது இரண்டாவது சுதேசி DHRUV ALH MK3 ஹெலிகாப்டர் படையணியை உருவாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

கொச்சி கடலோர காவல்படை வானூர்தி வளாகத்தில் (CGAE) நடைபெற்ற இந்த விழாவில் இந்திய கடலோர காவல்படையின் தலைமை தளபதியான DG இயக்குநர் ஜெனரல் பதானியா மற்றும் பல்வேறு மூத்த ராணுவ மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய இயக்குனர் ஜெனரல் பதானியா இந்த படையணி மூலமாக மேற்கு கடலோர பிராந்தியத்தில் கண்காணிப்பு பன்மடங்கு வலுப்படும் எனவும் இந்தியாவின் சுதேசிமயமாக்கல் முயற்சிகளில் மற்றொரு மைல்கல்லாக இது அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.