சீன எல்லைக்காக 12 சுதேசி ஸ்வாதி ரேடார்களை வாங்கும் தரைப்படை !!
1 min read

சீன எல்லைக்காக 12 சுதேசி ஸ்வாதி ரேடார்களை வாங்கும் தரைப்படை !!

சீன எல்லையோரம் பயன்படுத்துவதற்காக இந்திய தரைப்படை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12 ஸ்வாதி WLR ரக ரேடார்களை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த WLR என்றால் WEAPON LOCATING RADAR அதாவது ஆயுதங்களை கண்டறியும் ரேடார் என பொருள்படும் இவற்றை கொண்டு இந்திய தரைப்படை சீன தரைப்படையின் ஆயுதங்களை அவை நிலைநிறுத்தப்பட்டு உள்ள பகுதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

அதாவது சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்திய நிலைகள் மீது ஏவப்படும் மோர்ட்டார் குண்டுகள், பிரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவை ஏவப்படும் சீன நிலைகளை கண்டறிந்து பதில் தாக்குதலை துல்லியமாக நடத்த உதவும்.

இந்த 12 ஸ்வாதி ரேடார் அமைப்புகளை வாங்க சுமார் 1000 கோடி ரூபாய் ஆகும், ஏற்கனவே இந்திய தரைப்படை இத்தகைய 28 ரேடார் அமைப்புகளை வாங்கியதும் பாகிஸ்தான் எல்லையோரம் பயன்படுத்தி வருவதும் கூடுதல் தகவல் ஆகும்

இந்த ஸ்வாதி WL ரேடார் அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO வடிவமைத்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BEL தயாரித்தது குறிப்பிடத்தக்கது.