காங்கோ நாட்டில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம் !!
1 min read

காங்கோ நாட்டில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம் !!

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் MONUSCO திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் அமைதி படையில் இந்திய தரைப்படை பிரிவுகள் பணியாற்றி வருகின்றன.

கடந்த 22ஆம் தேதி காங்கோ ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர் அப்போது ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் அந்த தாக்குதலை முறியடித்தனர்.

இந்த ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பிரிவில் இந்திய தரைப்படை வீரர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.