இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மூன்று நாள் ஆய்வு பயணமாக லடாக் மாநிலத்திற்கு சென்றுள்ளார் அங்கு சீன உடன எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தின் தளபதி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் இந்திய தரைப்படையின் தயார்நிலை குறித்து விளக்கமளிக்க உள்ளனர் மேலும் தரைப்படை தளபதி முன்னனி நிலைகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உடனான எல்லையோர பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் அவர் ஏற்கனவே இங்கு கார்கில் அருகே 8ஆவது மலையக பிரிவை வழிநடத்திய அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.