எதிரிகளுக்கு தகவல் பரிமாறிய இந்திய விமானப்படை வீரர் கைது !!

  • Tamil Defense
  • May 13, 2022
  • Comments Off on எதிரிகளுக்கு தகவல் பரிமாறிய இந்திய விமானப்படை வீரர் கைது !!

தில்லி காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு இந்திய விமானப்படையில் சார்ஜென்ட் அந்தஸ்தில் பணியாற்றி வந்த தேவேந்திர குமார் ஷர்மா என்பவனை கைது செய்தனர்.

இவன் தில்லியில் விமானப்படை தரவுகள் அலுவலகத்தில் பணியாற்றி வந்தான், சமுக வலைதளத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு மிகவும் அந்தரங்கமான புகைப்படங்களை பகிர்ந்த காரணத்தால் அந்த பெண்ணிடம் சிக்கி கொண்டான்.

பின்னர் அவள் கேட்டபடி பல முக்கிய கோப்புகளை சட்டவிரோதமாக திருடி அவற்றில் இருந்த தகவல்களை கணிணி வாயிலாகவே பகிரந்துள்ளான், மேலும் அவனது மனைவியின் வங்கி கணக்கில் கணக்கில் வராத பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவனை கையும் களவும்க கைது செய்த காவல்துறையினர் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சதிக்கு பின்னால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI உள்ளதாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.