மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை சுகோய் விமானத்தில் இருந்து ஏவி சாதனை !!

  • Tamil Defense
  • May 12, 2022
  • Comments Off on மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை சுகோய் விமானத்தில் இருந்து ஏவி சாதனை !!

முதல்முறையாக தொலைவு அதிகரிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை சுகோய்30 போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து இந்தியா மற்றுமொரு சாதனையை புரிந்துள்ளது.

இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI ரக போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவப்பட்ட மேற்குறிப்பிட்ட ஏவுகணை வங்க கடல் பகுதியில் உள்ள இலக்கை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் இந்திய விமானப்படை, DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடற்படை, HAL ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் மற்றும் BAPL பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் ஆகியவை கூட்டாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி இந்திய விமானப்படையின் வலுவை பன்மடங்கு அதிகரித்துள்ளது அதாவது இனி தொலைதூரத்தில் உள்ள கப்பல்கள் அல்லது போர் விமானங்கள் போன்ற இலக்குகளை அதிக திறன் வாய்ந்த சுகோய்-30 போர் விமானங்கள் மூலமாக தாக்கி அழிக்க முடியும் என்பது சிறப்பாகும்.

மேற்குறிப்பிட்ட மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை சுகோய் போர் விமானத்தில் இணைக்க சில மென்பொருள் (Software Upgrades) மேம்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது அதனை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் செய்தது என்பது கூடுதல் தகவல் ஆகும்.