இந்திய கடற்படைக்காக DRDO வடிவமைத்து COCHIN SHIPYARD LIMITED கொச்சி கப்பல் கட்டுமான தளம் கட்டமைத்த INS ANVESH எனும் மிதக்கும் ஏவுகணை சோதனை மையம் FLOATING MISSILE TEST RANGE – FTR ரக கப்பலின் சோதனைகள் இந்த மாதம் துவங்க உள்ளன.
இந்த 9000 டன் எடை கொண்ட கப்பல் மூலமாக இனி ஆழ்கடல் பகுதியில் சென்று சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லும் பல்வேறு வகையான ஏவுகணைகள் மற்றும் நீரடிகணைகளை (Torpedo) இந்தியாவால் எந்தவித தடையுமின்றி சோதனை செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலில் Electro Optical Missile Tracking, S band Radar Tracking, Telemetry Devices போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுபாட்டு மையம், ஏவுகணை ஏவுதளம் போன்றவையும் இருக்கும் எனவும் இந்த கப்பல் இந்திய கடற்படை மற்றும் தரைப்படைக்கு பேருதவியாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
வெகு சில நாடுகளிடம் மாத்திரமே இந்த FLOATING MISSILE TEST RANGE ரக கப்பல்கள் உள்ளது தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைய உள்ளது என்பது சிறப்பான செய்தியாகும்.