2024ல் வெள்ளி கிரகத்திற்கு ஆய்வுகோளை அனுப்ப இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • May 7, 2022
  • Comments Off on 2024ல் வெள்ளி கிரகத்திற்கு ஆய்வுகோளை அனுப்ப இந்தியா திட்டம் !!

2024ஆம் ஆண்டு இந்தியாவின் இஸ்ரோ வெள்ளி கிரகத்திற்கு செவ்வாய் மற்றும் நிலவிற்கு ஆய்வு கோள்களை அனுப்பியதை போல அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இஸ்ரோ தலைவர் திரு.சோம்நாத் திட்டம் வகுக்குப்பட்டு உள்ளதாகவும், திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கான நிதி அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தயாராக இருக்கும் படியும் அறிவுறுத்தி பேசியுள்ளார்.

மேலும் அவர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இந்தியாவிடம் தற்போது மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப திறன்கள் இருப்பதாகவும், குறைந்த கால நேரத்திலேயே இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக தயார் செய்து விண்ணில் இஸ்ரோவால் ஏவ முடியும் எனவும் அவர் கூறினார்.

வருகிற 2024ஆம் ஆண்டு டிசம்பர் பூமியும் வெள்ளியும் ஒரே நேர்கோட்டில் வரும் எனவும் அப்போது இரண்டு கிரகங்களுக்கு இடையிலான தொலைவு குறைவாக இருக்கும் எனவும் அப்போது ஏவ திட்டமிட்டு உள்ளதாகவும் இதை போன்ற அடுத்த வாய்ப்பு 2031ஆம் ஆண்டு தான் அமையும் எனவும் கூறப்படுகிறது.

ஆய்வில் வெள்ளியின் புவியியல் அமைப்பு, வளிமண்டல தன்மைகள், எரிமலைகள் மற்றும் எரிமலை குழம்பின் தன்மைகள், வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தின் மீதான சூரிய புயலின் தாக்கம் ஆகியவற்றை குறித்தெல்லாம் ஆய்வு செய்யப்படும் எனவும் சோம்நாத் தெரிவித்தார்.