அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் பணிகள் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • May 4, 2022
  • Comments Off on அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் பணிகள் ஆரம்பம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 220 அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை NGADG – Next Generation Air Defence Gun Systems வாங்குவதற்கான பணிகளை துவங்கி உள்ளது.

தற்போது இதற்கான டென்டர் விடப்பட்டுள்ளது வருகிற ஜூன் மாதம் வரை இந்த டென்டரை எடுக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக இந்த 220 அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகள் வாங்கப்படும் எனவும் அடுத்தடுத்து மேலதிக இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மானிய நிறுவனமான ரெயின்மெட்டால் Rheinmetall தனது Skyshield Air Defence Gun துப்பாக்கி அமைப்பை மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்திய அரசு நிறுவனமான BHEL உடன் இணைந்து தயாரிக்க முன்வந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.