அமெரிக்க ஏவாக்ஸ் விமானத்தில் நாட்டம் காட்டியதா இந்தியா ??

அமெரிக்காவின் BOEING நிறுவனமானது தான் தயாரித்த E-7 Wedgetail ஏவாக்ஸ் மீது இந்தியா ஆர்வம் காட்டி உள்ளதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்தியாவுடன் சேர்த்து ஜப்பான் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளுமே இந்த BOEING E7 ஏவாக்ஸ் விமானத்தின் மீது ஆர்வம் காட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த BOEING E-7 Wedgetail AWACS – Airborne Early Warning and Control விமானமானது உலகின் தலைசிறந்த ஏவாக்ஸ் எனவும் பல போர்களில் தனது திறனை நிருபித்த அமைப்பு எனவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் பல்வேறு வான் மற்றும் கடல்சார் இலக்குகளை அடையாளம் கண்டு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களுக்கு அது குறித்த தகவல்களை தொடர் கண்காணிப்பின் மூலமாக அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Boeing போயிங் 737 அடுத்த தலைமுறை ரக விமானத்தில் மேற்குறிப்பிட்ட ஏவாக்ஸ் அமைப்பு இணைக்கப்பட்டும் அதே விமானத்தில் ஒரு AESA ஏசா ரேடாரும் இருக்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இது முதலில் அமெரிக்காவின் Boeing E3 விமானத்தை அடிப்படையாக கொண்டு ஆஸ்திரேலியாவுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது பின்னர் துருக்கி தென்கொரியா இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.