கூட்டு தயாரிப்பு முறையில் ஜெட் என்ஜின், ஒரு மாதத்தில் இறுதி முடிவு !!

  • Tamil Defense
  • May 3, 2022
  • Comments Off on கூட்டு தயாரிப்பு முறையில் ஜெட் என்ஜின், ஒரு மாதத்தில் இறுதி முடிவு !!

இந்தியா ஃபிரான்ஸ் நாட்டுடன் இணைந்து முற்றிலும் புதிய அதிநவீனமான போர் விமான ஜெட் என்ஜின் ஒன்றை தயாரிக்க சில காலமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு மாதத்திற்குள் பேசி இறுதி முடிவை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டின் SAFRAN நிறுவனம் இந்தியாவின் Defence Research & Development Organisation உடன் இணைந்து சுமார் 110 கிலோ நியூட்டன் உந்துவிசையை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த என்ஜின் ஒன்றை தயாரிக்க உள்ளது.

இதற்காக ஒரு பிரத்யேக ஆய்வு வடிவமைப்பு மையம் ஒன்று கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் திட்டம் இறுதி செய்யப்பட்டால் அப்போதில் இருந்து அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் என்ஜினை டெலிவரி செய்ய வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

இந்த புதிய 110 கிலோ நியூட்டன் உந்துவிசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட என்ஜின் நமது ஆம்கா போன்ற ஐந்தாம் தலைமுறை விமானங்களில் பயன்படுத்தப்படும் மேலும் விமான தயாரிப்பில் தன்னிறைவை நோக்கிய மற்றொரு மைல்கல்லாகவே அமையும் என்றால் மிகையல்ல.