உள்நாட்டு உளவுத்துறையின் மேம்படுத்தல் பணிக்கு 138 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!

  • Tamil Defense
  • May 23, 2022
  • Comments Off on உள்நாட்டு உளவுத்துறையின் மேம்படுத்தல் பணிக்கு 138 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!

இந்தியாவின் உள்நாட்டு உளவுப்பிரிவு Intelligence Bureau ஆகும், இதனை மேம்படுத்தும் விதமாக 138 கோடி ரூபாய் பணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

அதாவது இந்த நிதியை கொண்டு கார்கில் போருக்கு பிறகு கடந்த 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட MAC – Multi Agency Centre எனப்படும் பொதுவான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மேம்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் மாநில காவல்துறை தலைவர்கள், IB தலைவர், தரைப்படை மற்றும் துணை ராணுவப்படையின் தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு தழுவிய அளவிலான ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

அந்த ஆய்வு கூட்டத்தின் போது மத்திய மாநில பாதுகாப்பு அமைப்புகள் அதிகரித்து வரும் பாதுகாப்பு நிலையின்மை காரணமாக மிகவும் அதிகமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழல் உள்ளது உணரப்பட்டதாகவும் இதையடுத்து தான் இந்த மேம்பாட்டு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

MAC அமைப்பு மேம்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும், முதல் முறையாக கடந்த 2009ஆம் ஆண்டு அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் MAC அமைப்பு மேம்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த MAC மையத்தின் தில்லி தலைமை அலுவலகமானது ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள IB அமைப்பின் SMAC மையங்களுடனும் மாநில காவல்துறை உளவு அலுவலகங்களுடனும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு இருக்கும் இதற்கான மென்பொருள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

தற்போது இந்த மேம்பாட்டு பணிகளின் மூலமாத நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுடனும் இனி தில்லியில் உள்ள தலைமை MAC மையம் இணைக்கப்படும் இதன்மூலம் தகவல்கள் சிறப்பாக உடனுக்குடன் பரிமாறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.