காதலியிடம் ராணுவ ரகசியங்களை பரிமாறிய ராணுவ வீரர் கைது !!

  • Tamil Defense
  • May 23, 2022
  • Comments Off on காதலியிடம் ராணுவ ரகசியங்களை பரிமாறிய ராணுவ வீரர் கைது !!

கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பிரதீப் குமார் எனும் 24 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவனை கைது செய்தனர்.

அதாவது இவனுக்கு சமுக வலைதளத்தில் ஒரு பெண் அறிமுகமாகிய நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவள் எனவும் தற்போது பெங்களூரில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியதை பிரதீப் குமார் நம்பியுள்ளான் ஆனால் அந்த பெண் பாக் உளவாளி.

நாளடைவில் இருவரும் காதலர்களாகி உள்ளனர் இதன்பிறகு அந்த பெண் கேட்ட ரகசியங்களை எல்லாம் இவன் பரிமாறி உள்ளான் தில்லிக்கு சென்று முக்கிய ஆவணங்களை பெற்று அவற்றில் இருந்த தகவல்களை பரிமாறி உள்ளான் இதற்கு இவனது தோழி ஒருவரும் உடந்தை என்பது தெரிய வந்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் ராணுவத்தில் இணைந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகியுள்ளது தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னனி படைப்பிரிவு ஒன்றில் பணியமர்த்தப்பட்டு இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.