இந்தியாவின் தேஜாஸ் மற்றும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிப்பு !!

  • Tamil Defense
  • May 16, 2022
  • Comments Off on இந்தியாவின் தேஜாஸ் மற்றும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிப்பு !!

சமீபத்தில் இந்தியாவின் HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் PADC – Philippine Aerospace Development Corporation ஃபிலிப்பைன் ஏரோஸ்பேஸ் மேம்பாட்டு கழகம் இடையோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலமாக எதிர்காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான இலகுரக போர் விமானமான LCA TEJAS, இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரான LCH, அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரான ALH Dhruv – த்ரூவ் மற்றும் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரான LUH ஆகியவற்றை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரம்மாஸ் ஏவுகணைகள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இவை சீனாவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ வட்டாரங்கள் கருதுவதாக அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் பரவலாக நம்புகின்றனர்.

இதற்கு உதாரணமாக இந்திய விமானப்படையின் சுகோய்30 விமானங்கள் பிரம்மாஸ் ஏவுகணைகளுடன் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லைக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்ட போது சீனா மிகவும் கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்த நிகழ்வு சுட்டி காட்டப்படுகிறது.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சிறிய பாதுகாப்பு பட்ஜெட்டை கருத்தில் கொண்டு பார்க்கையில் விலை குறைந்த ஆனால் திறன்மிக்க ஆயுதங்கள் தான் அந்நாட்டிற்கு தகுந்தவையாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் இந்தியாவின் இலகுரக தேஜாஸ் போர் விமானம் மிகவும் அற்புதமான தளவாடம் என ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தற்போது ஃபிலிப்பைன்ஸ் தென்கொரியாவின் கொரிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலைகள் KAI – Korean Aerospace Industries மற்றும் அமெரிக்காவின் Lockheed Martin ஆகியவை இணைந்து தயாரித்த KAI T-50 எனும் இலகுரக போர் விமானங்களில் 12ஐ இயக்கி வருகிறது ஆனால் அவை தேஜாஸின் அடிப்படை வடிவத்திற்கு கூட இணையில்லை என அவர்கள் கருதுகின்றனர்.

காரணம் தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்தால் அமெரிக்க ஃபிரெஞ்சு இஸ்ரேலிய ஆயுதங்களை பயன்படுத்த கொள்ள முடியும் இது தவிர மிகவும் சக்திவாய்ந்த அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகளையும் பயன்படுத்தி கொள்ள முடியும், மேலும் KAI T-50 பயன்படுத்தும் அமெரிக்க GE F404 என்ஜினுடைய மேம்பட்ட சக்திவாய்ந்த வடிவத்தை தான் தேஜாஸ் பயன்படுத்துகிறது.

KAI T-50ஐ Block – 10 அல்லது Block – 20 அந்தஸ்திற்கு தரம் உயர்த்தினால் கூட தேஜாஸின் அடிப்படை விமானமான தேஜாஸ் மார்க்-1 விமானத்தின் Air to Air, Air to Ground, Anti Ship திறன்களுக்கு கூட இணையாக முடியாது, அதே நேரத்தில் T50 க்கு சமமான விலை அல்லது விலைகுறைந்த மார்க்-1ஏ விமானங்கள் AESA ரேடார், அதிநவீன மின்னனு போரியில் அமைப்பு, வருங்கால இந்திய ஆயுதங்கள் அனைத்தையும் இணைக்கும் திறன்களை பெற்றுள்ளன ஆகவே தேஜாஸ் தான் சிறந்த தேர்வாக அமையும் என ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.