பஞ்சாப் காலிஸ்தான் தாக்குதல் பயங்கரவாத எதிர்ப்பு படையை உருவாக்கும் ஹரியானா !!
சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் அமைந்துள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுப்பிரிவு தலைமையகம் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் விரைவாக மாநில காவல்துறையில் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை வழிநடத்த ஒரு டிஐஜி அந்தஸ்திலான மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் அவருக்கு கீழ் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான அதிகாரிகளும் பணியாற்றுவர் எனவும் கூறினார்.
இது தவிர பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்கள் அரசு அலுவலக வளாகங்கள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் மாநிலத்தில் தங்கியுள்ள பிற மாநிலத்தவர்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுடன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நான்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.