ஏற்கனவே PROJECT 75 திட்டத்தின் கீழ் ஆறு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஃபிரான்ஸ் நாட்டின் NAVAL GROUP உதவியுடன் இந்தியாவின் MDL – MAZAGON DOCKS LIMITED கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்பட்ட நிலையில்
இதன் தொடர்ச்சியாக அடுத்து ஆறு நீர்மூழ்கி கப்பல்களை PROJECT 75I என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே கட்டமைப்பதற்கான உலகளாவிய டென்டர் விடப்பட்டு இருந்தது இதில் ஜெர்மனி ரஷ்யா ஃபிரான்ஸ் தென்கொரியா ஸ்பெயின் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
இதில் ஜெர்மனியும் ரஷ்யாவும் ஏற்கனவே விலகி கொண்ட நிலையில் தற்போது ஃபிரான்ஸ் நாட்டின் NAVAL GROUP நிறுவனமானது சில நிபந்தனைகள் காரணமாக பின்வாங்குவதாக அறிவித்துள்ளது, ஃபிரான்ஸ் டீசல் எலெக்ட்ரிக் ரக Barracuda SSN தாக்குதல் நீர்மூழ்கியை தரவிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இப்போது போட்டியில் தென் கொரியாவின் KSS-3 மற்றும் ஸ்பெயின் நாட்டின் S-80 Plus ரக நீர்மூழ்கிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது, இந்தியா P-75, P-75I, P-76 ஆகிய 3 திட்டங்கள் மூலமாக 24 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை படையில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.