நேட்டோவில் விரைவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ரஷ்யாவுக்கு எழும் சவால் !!

  • Tamil Defense
  • May 13, 2022
  • Comments Off on நேட்டோவில் விரைவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ரஷ்யாவுக்கு எழும் சவால் !!

ஃபின்லாந்து பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் கூட்டாக நேட்டோவில் ஃபின்லாந்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள இணைந்தே ஆக வேண்டும் எனவும் தேசிய அளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஃபின்லாந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ளும் வகையில் சற்றும் காலம் தாழ்த்தாமல் ஃபின்லாந்து நேட்டோவில் இணைய விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர்களின் கூட்டு அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் பேசும்போது ஃபின்லாந்து விண்ணப்பித்தால் நிச்சயமாக ஏற்று கொள்வோம், ஃபின்லாந்து நேட்டோவின் முக்கியமான கூட்டாளி முதிர்ச்சி அடைந்த ஜனநாயக நாடு யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நாடு என குறிப்பிட்டார்.

இதே போல சுவீடனும் நேட்டோவில் இணைய விரும்புகிறது, இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைந்தால் ரஷ்ய எல்லையில் நேட்டோ படைகள் நேரடியாக களமிறக்கும் இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவால் என்றால் மிகையல்ல, ரஷ்யா இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைய கூடாது என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.