முப்படைகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மின்மயமாக்கல் நடவடிக்கையும் ஒரு சேர செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடற்படைக்கான மின்சார ரோந்து கலன்கள் தயாராகி வருகின்றன.
பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் EV நிறுவனமான Tresa Energy RIB எனப்படும் வழக்கமான ரோந்து படகின் மின்சார வடிவத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இலகுரக அதிக திறன்மிக்க 18 பேர் பயணிக்கும் திறன் கொண்ட EV.7M RIB எனப்படும் மின்சார படகானது ரோந்து கண்காணிப்பு தேடுதல் மற்றும் மீட்பு போக்குவரத்து போன்ற பணிகளுக்கு ஏற்றது எனவும்
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தாமல் சத்தம் வெளிப்படுத்தாமல் எந்த தெர்மல் கருவிகளிலும் சிக்காத வண்ணம் ஸ்டெல்த் முறையில் இயங்கும் என TRESA நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான நிஷாந்த் கால்போர் தெரிவித்தார்.
இந்த மின்சார ரோந்து படகு முதல்முறையாக இந்திய பாதுகாப்பு கண்காட்சியில் 2020ஆம் ஆண்டு காட்சிபடுத்தப்பட நிலையில் 2021இல் முடிவுகள் வெளியான போது தேர்வு செய்யப்பட்டதாகவும்
2022 ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் 2023 ஃபெப்ரவரி முதலாவது சோதனை நடைபெறும் எனவும் ஏப்ரல் 2023ஆம் ஆண்டு இந்திய கடற்படையிடம் முதலாவது படகு ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.