DRDO பெற உள்ள இந்திய கடற்படையின் கீலோ ரக நீர்மூழ்கி காரணம் என்ன ??
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO விடம் விரைவில் இந்திய கடற்படையின் கீலோ ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி ஒன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நீர்மூழ்கியை கொண்டு DRDOவானது எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் ஐயான் Li-ion பேட்டரி, சுதேசி AIP மற்றும் பல்வேறு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள் அடுத்து இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்க உள்ள 12 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை தயாரிக்க பேருதவியாக அமையும் எனவும் 2030ஆம் ஆண்டு முதல் இவற்றின் தயாரிப்பு துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
DRDO வின் AIP தொழில்நுட்பம் Phosphoric Acid எரிபொருளை அடிப்படையாக கொண்டது எனவும், Li-ion பேட்டரியானது பேட்டரி மேலாண்மை அமைப்புடன் இணைந்தது எனவும் சுதேசி மின் மோட்டார் 5 மெகாவாட் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.