செயற்கைகோள் புகைப்படங்களில் சிக்கிய புதிய சீன நீர்மூழ்கி கப்பல் !!

  • Tamil Defense
  • May 11, 2022
  • Comments Off on செயற்கைகோள் புகைப்படங்களில் சிக்கிய புதிய சீன நீர்மூழ்கி கப்பல் !!

சமீபத்தில் ஒரு சீன கப்பல் கட்டுமான தளத்தை செயற்கைகோள் முலமாக புகைப்படம் எடுத்த போது அதில் சீனாவின் புதிய அணுசார் நீர்மூழ்கி கப்பல் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது முற்றிலும் புதிய நீர்மூழ்கி கப்பல் தானா அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரப்பட்டு தற்போது மேம்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பலா என்ற சந்தேகமும் ஒருபுறம் எழுந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் Planet Labs எனும் செயற்கை கோள் புகைப்பட நிறுவனத்திடம் இருந்து பெற்ற புகைப்படத்தில் அந்த நீர்மூழ்கி கப்பலானது நீரில் பாதி மூழ்கிய நிலையில் இருப்பதாக தெரிகிறது.

சிங்கப்பூரை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் காலின் கோஹ் சீனாவின் புதிய Type 093 ரக அணுசார் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலின் மீதான ஆர்வம் பரவலாக உள்ளது ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது அது தானா என உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்தார்.