நிலாவை சுற்றி செயற்கைகோள்களை நிலைநிறுத்த திட்டமிடும் சீனா !
1 min read

நிலாவை சுற்றி செயற்கைகோள்களை நிலைநிறுத்த திட்டமிடும் சீனா !

CNSA – China National Space agency சீன தேசிய விண்வெளி முகமை நிலாவை சுற்றி செயற்கைகோள்களை நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஏப்ரல் 24 அன்று CNSAவின் இணை இயக்குனர் வூ யான்ஹூவா சிறிய தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டி கட்டமைப்பை நிலவை சுற்றி உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார்.

வருகிற 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு இந்த செயற்கைகோள்களை ஏவும் பணி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இத்திட்டத்தை வெளி உலகிற்கு அறிவிக்கையில் சீன விஞ்ஞானிகள் வேறு நாடுகளும் இதில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

மேலும் சீனா தொடர்ச்சியாக Chang’e-6, chang’e-7, chang’e-8 போன்ற நிலவு ஆய்வு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் நிலவுசார் ஆய்வில் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை பெறவும் நிலவில் ஒரு சர்வதேச ஆய்வு மையத்தை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் கருதப்படுகிறது.

நிலவின் தென் துருவ பகுதியில் தான் சீனா ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளதும் இதனை நிலவுசார் ஆய்வின் நான்காவது நிலையின் போது நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் NASA வும் சீனாவை போன்றே நிலவை சுற்றி செயற்கைகோள்களை நிலைநிறுத்தி LUNANET எனப்படும் தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.