சீனா பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் விதமாக ஏரியின் குறுகிய பகுதியில் பாலம் ஒன்றை கட்டி வந்ததை நாம் அறிவோம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக தற்போது இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது ஜனவரி மாதம் இந்த பாலத்தை கட்ட துவங்கிய நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர இந்த பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதும் தெரிய வருகிறது அனேகமாக இந்த சாலை திபெத்தின் ருடோக் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சீன ராணுவ முகாமுடன் இப்பாலத்தை இணைப்பதற்காகவே அமைக்கப்படலாம் என கருதப்படுகிறது.
ஆகவே எதிர்காலத்தில் இந்திய படைகளுடன் பிரச்சனை ஏற்பட்டால் சீன படைகள் ஏரியை சுற்றி செல்லாமல் பாலத்தின் வழியாக தெற்கு கரையை அடைந்து பதிலடி கொடுக்கவும் தேவைபட்டால் ருடோக் முகாமில் இருந்து மேலதிக சீன வீரர்கள் சாலை மாரக்கமாக இந்த பாலத்தை அடையவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.