அமர்நாத் யாத்திரை மீது நடைபெறவிருந்த தாக்குதல் முறியடிப்பு !!
1 min read

அமர்நாத் யாத்திரை மீது நடைபெறவிருந்த தாக்குதல் முறியடிப்பு !!

இந்திய எல்லை பாதுகாப்பு படை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோரம் பயங்கரவாதிகள் எல்லையை கடக்க பயன்படுத்தி வந்த சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

இதன்மூலம் விரைவில் நடைபெறவிருந்த அமர்நாத் ஆன்மீக யாத்திரை மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த சுரங்கமானது சுமார் 150 மீட்டர் நீளம் கொண்டது எனவும் சாக் ஃபக்கிரா எல்லை காவல் சாவடிக்கு அருகே இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் நுழைவு வாயிலானது 2 மீட்டர் அகலம் கொண்டதாகவும் இதன் தொடக்கம் பாகிஸ்தானில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுரங்கம் வழியாக ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கலாம் எனவும் விரைவில் இந்த சுரங்கம் விரிவாக ஆய்வு செய்யப்படும் என காவல்துறை டிஐஜி சந்து தெரிவித்தார்.