அலாஸ்காவில் போர் பயிற்சி தனது சிறந்த போர் விமானங்களை களமிறக்கும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • May 7, 2022
  • Comments Off on அலாஸ்காவில் போர் பயிற்சி தனது சிறந்த போர் விமானங்களை களமிறக்கும் அமெரிக்கா !!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள Elmendorf Richardson கூட்டு படை தளத்தில் போர் விமான சண்டை ஒத்திகை ஒன்று நடைபெற உள்ளது.

இந்த போர் ஒத்திகையில் எல்மன்டார்ஃப் ரிச்சர்டஸன் படைத்தளத்தில் உள்ள 3ஆவது வான்படையணியின் F22 RAPTOR மற்றும் கலிஃபோர்னியாவின் Fresno படைத்தளத்தின் 144ஆவது படையணியை சேர்ந்த F15 Eagle போர் விமானங்கள் பங்கு பெற உள்ளன.

இந்த இரண்டு வகையான போர் விமானங்களுமே அமெரிக்காவின் தலைசிறந்த DOGFIGHT சண்டை திறன் கொண்ட போர் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த போர் ஒத்திகையின் மூலமாக நிஜ சண்டைகளுக்கு தேவையான திறன்களை பரிசோதனை செய்து கொள்வது தான் நோக்கம் என கூறப்படுகிறது.

இதை தவிர இந்த போர் ஒத்திகையின் மூலமாக இரண்டு வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த மேற்குறிப்பிட்ட போர் விமானங்களின் இணைந்து இயங்கும் திறன் மற்றும் F22 விமானங்களை அதிகளவில் பசிஃபிக் பிராந்தியத்தில் குவிப்பது போன்றவற்றையும் உறுதிபடுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.