அமெரிக்காவின் BOEING போயிங் நிறுவனம் “Phantom Eye” எனப்படும் ஒரு அதிக உயரத்தில் அதிக நேரம் (HALE – High Altitude High Endurance) பறக்க கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்றை தயாரித்துள்ளது.
குறிப்பிட்டு சொன்னால் BOEING நிறுவனத்தின் ஒரு பிரிவான Boeing Phantom Works தான் அமெரிக்க ராணுவத்தின் தொடர்ச்சியான உளவு கண்காணிப்பு தகவல் சேகரிப்பு ஆகிய தேவைகளை சந்திக்கும் வகையில் இதனை வடிவமைத்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆளில்லா வானூர்தி அமெரிக்க கடற்படையின் தகவல்தொடர்பு பரிமாற்ற நடவடிக்கைகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, 2012 ஆம் ஆண்டு முதலாவது Phantom Eye ஆளில்லா வானூர்தி தயாரிக்கப்பட்டு பறக்கும் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது பின்னர் 2014 வரை சோதனைகள் நடைபெற்று கடைசியில் நிராகரிக்கப்பட்டது.
சுமார் 10 நாட்கள் தொடர்ச்சியாக 65,000 அடி உயரத்தில் பறக்கும் வகையிலும் ஹைட்ரஜன் எரிபொருளை கொண்டு இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இந்த ஆளில்லா வானூர்தியானது தற்போது கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப்படையின் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.