கைதான 4 காலிஸ்தான் பயங்கரவாதிகள் ட்ரோன் மூலமாக ஆயுதம் பெற்றது உறுதி !!

  • Tamil Defense
  • May 6, 2022
  • Comments Off on கைதான 4 காலிஸ்தான் பயங்கரவாதிகள் ட்ரோன் மூலமாக ஆயுதம் பெற்றது உறுதி !!

ஹரியானா மாநிலம் கர்னால் நகரத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்ப்ரீத், பர்மீந்தர், அமன்தீப் மற்றும் பூபிந்தர் ஆகிய நான்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து காவல்துறையினர் 31 தோட்டாக்கள், 3 IED வெடிகுண்டுகள், 6 மொபைல் ஃபோன்கள் மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜிந்தர் சிங் ரின்டா இயக்கும் பாகிஸ்தானிய ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்களை பெற்றதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நால்வர் மற்றும் பாகிஸ்தானை ஹர்ஜிந்தர் சிங் ரின்டா (BKI அமைப்பு) மற்றும் பாகிஸ்தான் படாலாவை சேர்ந்த ராஜ்வீர் சிங் என மொத்தம் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.