Day: May 29, 2022

மேலதிக K9 VAJRA தானியங்கி பிரங்கிகளை வாங்க பரிசீலனை ??

May 29, 2022

தென்கொரியாவின் Hanwha நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவின் Larsen & Toubro நிறுவனம் குஜராத்தில் உள்ள ஹசீரா தொழிற்சாலையில் K9 VAJRA தானியங்கி பிரங்கிகளை தயாரித்து வழங்கியது. அந்த வகையில் முதல் தொகுதியில் சுமார் 100 K9 VAJRA பிரங்கிகள் இந்திய தரைப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன, இவை இந்திய தரைப்படைக்கு மிகுந்த திருப்தியை அளித்தன குறிப்பாக கல்வானுக்கு பிறகு அதிக உயர பகுதியான லடாக்கில் களமிறக்கப்பட்ட இந்த தானியங்கி பிரங்கிகள் அங்கும் மிக […]

Read More

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை !

May 29, 2022

விரைவில் பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் முப்படை துணை தளபதிகள் மற்றும் ஒரு மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO) விஞ்ஞானி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேலதிகமாக சுமார் 100 K9 VAJRA ரக தானியங்கி பிரங்கிகளை வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில் அது தவிர வேறு பல்வேறு ஆயுத அமைப்புகளுக்கான ஒப்பந்தங்கள் பற்றியும் ஆலோசனை நடைபெற […]

Read More

கடலடியில் இருந்து ஏவப்படும் ஆளில்லா வானூர்தி தயாரிக்க அறிவிக்கை வெளியிட்ட இந்தியா !!

May 29, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடலடியில் அதாவது நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்பட கூடிய ஆளில்லா வானூர்திகளை தயாரிக்க விருப்பமுள்ள நிறுவனங்களை கண்டறிய EOI – Expression of Interest எனும் அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த திட்டமானது பாதுகாப்பு அமைச்சகத்தின் TDF – Technology Development Fund அதாவது தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் ஒரு பகுதியாகும் அதாவது நவீன தொழில்நுட்பங்களை தயாரிக்க திறனுள்ள ஆனால் நிதி ஆதாரம் இல்லாத நிறுவனங்களுக்கு நிதி அளித்து ஊக்குவிக்கும் திட்டமாகும். […]

Read More

வெளிநாடுகளுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்ய ஜப்பான் முடிவு !!

May 29, 2022

ஜப்பானிய அரசு முதல்முறையாக போர் விமானங்கள், ஏவுகணைகள், குண்டு துளைக்கா கவச உடைகள், தலைகவசங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் கொள்கை முடிவை அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியா ஆஸ்திரேலியா வியட்நாம் தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா ஃபிலிப்பைன்ஸ் அமெரிக்கா இங்கிலாந்து ஃபிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி போன்ற 12 நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பான் திட்டமிட்டு உள்ளது. இந்த பட்டியலில் உள்ள அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா போன்ள க்வாட் நாடுகள் மற்றும் இந்தோனேசியா ஃபிலிப்பைன்ஸ் வியட்னாம் போன்ற […]

Read More

காங்கோ நாட்டில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம் !!

May 29, 2022

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் MONUSCO திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் அமைதி படையில் இந்திய தரைப்படை பிரிவுகள் பணியாற்றி வருகின்றன. கடந்த 22ஆம் தேதி காங்கோ ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர் அப்போது ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் அந்த தாக்குதலை முறியடித்தனர். இந்த ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பிரிவில் இந்திய தரைப்படை வீரர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Read More

பல முனை போருக்கு தயாராகும் இஸ்ரேலிய முப்படைகள் !!

May 29, 2022

இஸ்ரேலிய ராணுவம் பல முனை போருக்கு தயாராகும் வண்ணம் மிகப்பெரிய போர் ஒத்திகை ஒன்றில் ஈடுபட்டுள்ளது வருகிற ஜூன் 3ஆம் தேதி வரை இது நடைபெறும் என தெரிகிறது. ஒரே நேரத்தில் சுமார் 80க்கும் அதிகமான இடங்களில் தாக்குதல் நடைபெற்றதை போல பாவித்தும் இஸ்ரேலின் அனைத்து எல்லைகளையும் பாதுகாப்பது போலவும் இந்த பயிற்சிகள் நடைபெறுவதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர லெபனான் நாட்டில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புடன் போர் மூன்டால் ஒரே நாளில் […]

Read More

ராணுவ தளவாட உற்பத்தியில் கால்பதிக்கும் ஜின்டால் குழுமம் !!

May 29, 2022

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை ஜின்டால் குழமத்திற்கு சொந்தமானது இத்தகைய பெருமைக்குரிய ஜின்டால் குழுமம் ராணுவ தளவாட உற்பத்தியில் கால்பதிக்க உள்ளது. தற்போது தனது பங்காளி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஜின்டால் குழுமம் ஒரு கவச வாகனத்தை தயாரித்து சோதனை செய்து வருவதாகவும் சோதனைகளில் வெற்றி பெற்றால் அரசின் பார்வைக்கு தெரிவிக்கப்படும் எனவும் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று கொண்டு ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் மேற்குறிப்பிட்ட கவச […]

Read More