Day: May 23, 2022

நாட்டின் முதலாவது மருத்துவமனை கப்பலுக்கான அறிவிக்கையை வெளியிட்ட இந்திய கடற்படை !!

May 23, 2022

இந்திய கடற்படை நமது நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக மருத்துவமனை கப்பல் ஒன்றை கட்டுவதற்கான அறிவிக்கையை இந்திய கப்பல் கட்டுமான தளங்களுக்கென வெளியிட்டு உள்ளது. இந்த கப்பலில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும், 117 மருத்துவ பணியாளர்கள் இருப்பர் அதிகபட்சமாக 600 பேர் வரை இந்த கப்பலில் பயணிக்க முடியும் ஆகவே SRtP விதிகளுக்கேற்ப இந்த கப்பல் கட்டப்பட வேண்டும். 15,000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பலில் 15 அதிகாரிகள், 120 மாலுமிகளும் மருத்துவ பிரிவில் […]

Read More

இரண்டு முன்னனி போர் கப்பல்களுக்கான இரும்பை சப்ளை செய்த இந்திய நிறுவனங்கள் !!

May 23, 2022

சமீபத்தில் இந்திய கடற்படையின் Project 15 Bravo திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் ரகத்தின் கடைசி நாசகாரி கப்பலான சூரத் மற்றும் மற்றும் project 17 Alpha நீலகிரி ரகத்தின் முன்றாவது ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பலான INS UDAYGIRI உதயகிரி ஆகியவை மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் கடலில் இறக்கப்பட்டன. இந்த இரண்டு கப்பல்களை கட்ட தேவையான இரும்பை மத்திய அரசு நிறுவனமான SAIL – STEEL AUTHORITY OF INDIA […]

Read More

உள்நாட்டு உளவுத்துறையின் மேம்படுத்தல் பணிக்கு 138 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!

May 23, 2022

இந்தியாவின் உள்நாட்டு உளவுப்பிரிவு Intelligence Bureau ஆகும், இதனை மேம்படுத்தும் விதமாக 138 கோடி ரூபாய் பணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த நிதியை கொண்டு கார்கில் போருக்கு பிறகு கடந்த 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட MAC – Multi Agency Centre எனப்படும் பொதுவான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மேம்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் மாநில காவல்துறை தலைவர்கள், IB தலைவர், தரைப்படை மற்றும் துணை ராணுவப்படையின் தலைவர்களுடன் […]

Read More

பைராத்கர் ட்ரோன்களை அடுத்து அட்லய் டாங்கிகளை ஏற்றுமதி செய்ய முனையும் துருக்கி !!

May 23, 2022

துருக்கி தனது பைராத்கர் ஆளில்லா விமானங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது அவை அஸர்பெய்ஜான்- அர்மீனியா போரிலும், ரஷ்யா உக்ரைன் போரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இப்படி துருக்கியின் பைராத்கர் ஆளில்லா வானூர்திகள் உலகளாவிய ரீதியில் ஆயுத சந்தையில் பெருமதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளன என்றால் மிகையாகாது. இந்த நிலையில் துருக்கி அடுத்தபடியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அட்லய் டாங்கிகளை ஏற்றுமதி செய்யும் எண்ணத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அட்லய் டாங்கியின் பாகங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும். ஜெர்மனியிடம் […]

Read More

காதலியிடம் ராணுவ ரகசியங்களை பரிமாறிய ராணுவ வீரர் கைது !!

May 23, 2022

கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பிரதீப் குமார் எனும் 24 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவனை கைது செய்தனர். அதாவது இவனுக்கு சமுக வலைதளத்தில் ஒரு பெண் அறிமுகமாகிய நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவள் எனவும் தற்போது பெங்களூரில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியதை பிரதீப் குமார் நம்பியுள்ளான் ஆனால் அந்த பெண் பாக் உளவாளி. நாளடைவில் இருவரும் காதலர்களாகி உள்ளனர் இதன்பிறகு அந்த […]

Read More

இரண்டாம் தொகுதி Sig716 துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு !!

May 23, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 73,000 Sig716 துப்பாக்கிகளை அமெரிக்காவில் இருந்து வாங்க ஆர்டர் கொடுக்க உள்ளதாக நம்பத்தகுந்த பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய தயாரிப்பு தோட்டாக்களால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டாம் தொகுதி Sig716 துப்பாக்கிகளை வாங்கும் முடிவை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கைவிட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய தரைப்படையின் 400 காலாட்படை பட்டலாலியன்களில் குறைந்தபட்சம் இரண்டு கம்பனிகளுக்கு (ஏறத்தாழ 200 வீரர்கள்) இந்த […]

Read More