காஷ்மீரில் 75 பயங்கரவாதிகள் என்கவுண்டர் இனியும் செயல்படும் 168 பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • May 13, 2022
  • Comments Off on காஷ்மீரில் 75 பயங்கரவாதிகள் என்கவுண்டர் இனியும் செயல்படும் 168 பயங்கரவாதிகள் !!

இந்திய தரைப்படை இந்த ஆண்டு இதுவரை 75 பயங்கரவாதிகளை காஷ்மீரில் என்கவுண்டர் செய்துள்ளதாகவும், இனியும் சுமார் 168 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்ட 75 பயங்கரவாதிகளில் 21 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஆவர், மீதமுள்ள 168 பயங்கரவாதிகளும் கொல்லப்படும் அல்லது சரணடையும் வரை தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெறும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 11 மாதங்களில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் 12 எல்லை ஊடுருவல் முயற்சிகளை தரைப்படை முறியடித்து உள்ளதாகவும் இந்த ஆண்டு 87 பயங்கரவாத உதவியாளர்களை கைது செய்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 180 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்கள் என்பதும் கடந்த ஆண்டு சுமார் 495 பயங்கரவாத உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.