Day: May 13, 2022

பயிற்சியின் போது கரடியால் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் !!

May 13, 2022

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எல்மன்டார்ஃப் ரிச்சர்டஸன் அமெரிக்க கூட்டு ராணுவ தளத்தில் அமெரிக்க தரைப்படையின் பாராசூட் படையினர் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த வீரர்களின் ஒரு சிறு குழு அடர்ந்த காட்டு பகுதியில் போர் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு இருந்த போது கரடி ஒன்று ஒரு வீரரை மிகவும் கொடுரமாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து அலாஸ்கா மாகாண வனத்துறை வீரர்கள் கரடியை பிடிக்க விரைந்துள்ளனர்.

Read More

பஞ்சாப் காலிஸ்தான் தாக்குதல் பயங்கரவாத எதிர்ப்பு படையை உருவாக்கும் ஹரியானா !!

May 13, 2022

சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் அமைந்துள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுப்பிரிவு தலைமையகம் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் விரைவாக மாநில காவல்துறையில் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை வழிநடத்த ஒரு டிஐஜி அந்தஸ்திலான மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் அவருக்கு கீழ் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான […]

Read More

எதிரிகளுக்கு தகவல் பரிமாறிய இந்திய விமானப்படை வீரர் கைது !!

May 13, 2022

தில்லி காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு இந்திய விமானப்படையில் சார்ஜென்ட் அந்தஸ்தில் பணியாற்றி வந்த தேவேந்திர குமார் ஷர்மா என்பவனை கைது செய்தனர். இவன் தில்லியில் விமானப்படை தரவுகள் அலுவலகத்தில் பணியாற்றி வந்தான், சமுக வலைதளத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு மிகவும் அந்தரங்கமான புகைப்படங்களை பகிர்ந்த காரணத்தால் அந்த பெண்ணிடம் சிக்கி கொண்டான். பின்னர் அவள் கேட்டபடி பல முக்கிய கோப்புகளை சட்டவிரோதமாக திருடி அவற்றில் இருந்த தகவல்களை கணிணி வாயிலாகவே பகிரந்துள்ளான், மேலும் அவனது […]

Read More

இந்தியாவில் நடைபெற உள்ள SCO பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் பங்கு பெறும் பாகிஸ்தான் !!

May 13, 2022

கடந்த 2001 ஆம் ஆண்டு சீனாவின் யோசனைப்படி உதயமான அமைப்பு தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதாவது Shanghai Cooperation Organization இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017ஆம் ஆண்டு இணைந்தன. இந்த ஆண்டுக்கான SCO பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் இந்தியாவில் வருகிற 16 முதல் 19ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டமானது SCO அமைப்பின் RATS – Regional Anti Terrorism Structure அதாவது பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு […]

Read More

சீன எல்லைக்காக 12 சுதேசி ஸ்வாதி ரேடார்களை வாங்கும் தரைப்படை !!

May 13, 2022

சீன எல்லையோரம் பயன்படுத்துவதற்காக இந்திய தரைப்படை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12 ஸ்வாதி WLR ரக ரேடார்களை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த WLR என்றால் WEAPON LOCATING RADAR அதாவது ஆயுதங்களை கண்டறியும் ரேடார் என பொருள்படும் இவற்றை கொண்டு இந்திய தரைப்படை சீன தரைப்படையின் ஆயுதங்களை அவை நிலைநிறுத்தப்பட்டு உள்ள பகுதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்திய நிலைகள் மீது ஏவப்படும் மோர்ட்டார் குண்டுகள், […]

Read More

லடாக்கிற்கு 3 நாள் ஆய்வுபயணம் மேற்கொண்டுள்ள தரைப்படை தளபதி !!

May 13, 2022

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மூன்று நாள் ஆய்வு பயணமாக லடாக் மாநிலத்திற்கு சென்றுள்ளார் அங்கு சீன உடன எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தின் தளபதி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் இந்திய தரைப்படையின் தயார்நிலை குறித்து விளக்கமளிக்க உள்ளனர் மேலும் தரைப்படை தளபதி முன்னனி நிலைகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று மேற்கு பகுதியில் அமைந்துள்ள […]

Read More

எல்லையோரம் பெண் BSF வீராங்கனையை தாக்கி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருட்டு !!

May 13, 2022

மேற்கு வங்க மாநிலத்தின் பஸிர்ஹாட் பகுதியில் இந்தியா வங்கதேசம் இடையே கோஜதங்கா பகுதியில் சர்வதேச எல்லை பகிரப்படுகிறது இங்கு BSF வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கடந்த 11 ஆம் தேதி எல்லை பாதுகாப்பு படையின் BSF 153ஆவது பட்டாலியனை சேரந்த பெண் வீராங்கனை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருட்டில் அவரை சில மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி அவரது INSAS துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்களை திருடி […]

Read More

காஷ்மீரில் 75 பயங்கரவாதிகள் என்கவுண்டர் இனியும் செயல்படும் 168 பயங்கரவாதிகள் !!

May 13, 2022

இந்திய தரைப்படை இந்த ஆண்டு இதுவரை 75 பயங்கரவாதிகளை காஷ்மீரில் என்கவுண்டர் செய்துள்ளதாகவும், இனியும் சுமார் 168 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட 75 பயங்கரவாதிகளில் 21 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஆவர், மீதமுள்ள 168 பயங்கரவாதிகளும் கொல்லப்படும் அல்லது சரணடையும் வரை தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெறும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 11 மாதங்களில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் 12 எல்லை ஊடுருவல் முயற்சிகளை […]

Read More

மூன்று பலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்திய வடகொரியா !!

May 13, 2022

வடகொரியா தொடர்ச்சியாக மூன்று குறுந்தூர பலில்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய ராணுவத்தின் கூட்டு படைகள் தலைமை தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகொரிய தலைநகர் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், தென்கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை தாண்டிய கடல் பகுதிகளில் மூன்று ஏவுகணைகளும் விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது, இதனையடுத்து தென்கொரியா அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் கண்காணிப்பை வலுப்படுத்தி உள்ளன. ஜப்பானிய பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா ஏவுகணை சோதனைகள் பற்றி […]

Read More

நேட்டோவில் விரைவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் ரஷ்யாவுக்கு எழும் சவால் !!

May 13, 2022

ஃபின்லாந்து பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் கூட்டாக நேட்டோவில் ஃபின்லாந்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள இணைந்தே ஆக வேண்டும் எனவும் தேசிய அளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும் ஃபின்லாந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ளும் வகையில் சற்றும் காலம் தாழ்த்தாமல் ஃபின்லாந்து நேட்டோவில் இணைய விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர்களின் கூட்டு அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் பேசும்போது ஃபின்லாந்து விண்ணப்பித்தால் […]

Read More