உக்ரைன் மீது சிறிய ரக அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா ??

  • Tamil Defense
  • April 2, 2022
  • Comments Off on உக்ரைன் மீது சிறிய ரக அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா ??

ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை துவங்கிய காலகட்டத்திலேயே தனது அணு ஆயுத படையணிகளை தயாராக இருக்க உத்தரவிட்டது.

இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் உதவுவதை தடுக்கும் ஒரு ரஷ்ய யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மற்றொரு அனுமானம் முன்வைக்கப்படுகிறது அதாவது உக்ரைன் போரின் போக்கை மாற்ற ரஷ்யா சிறிய ரக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்பது தான் அது.

TACTICAL NUKES எனும் சிறிய ரக அணு ஆயுதங்கள் ஐரோப்பாவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் உக்ரைன் நாட்டை மட்டுமே பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது முதலில் கடலிலோ அல்லது ஆள் அரவமற்ற பகுதியிலோ இவற்றை வெடித்து மிரட்டி பார்க்கலாம் அப்படியும் உக்ரைன் சரணடையவில்லை என்றால் நேரடியாக பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இப்படி செய்தால் உலகளாவிய ரீதியில் ரஷ்யாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும் இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் இதனை ஆதரிக்க வாய்ப்பேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.