தேவைப்பட்டால் மீண்டும் எல்லையை தாண்டுவோம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

  • Tamil Defense
  • April 23, 2022
  • Comments Off on தேவைப்பட்டால் மீண்டும் எல்லையை தாண்டுவோம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக மீண்டும் தேவைப்பட்டால் எல்லையை தாண்டுவோம் என கூறியுள்ளார்.

அஸாம் மாநிலத்தை சேர்ந்த 1971 போரில் பங்கேற்ற ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விழா ஒன்றில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்தியாவுக்கு வெளியில் இருந்து ஆபத்து உருவானால் மீண்டும் எல்லை தாண்டி வந்து தாக்க தயங்க மாட்டோம் என பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அவர் பேசும்போது கிழக்கு எல்லையோரம் நிலவும் அமைதி இந்தியாவின் மேற்கு எல்லையோரம் நிலவவில்லை எனவும் கிழக்கு எல்லையோரம் பெருமளவில் ஊடுருவல்கள் குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.