ISRO வை பெரிதும் மதிக்கிறோம் UAE செவ்வாய் கிரக ஆய்வு திட்ட இயக்குனர் !!

  • Tamil Defense
  • April 28, 2022
  • Comments Off on ISRO வை பெரிதும் மதிக்கிறோம் UAE செவ்வாய் கிரக ஆய்வு திட்ட இயக்குனர் !!

ஐக்கிய அரபு அமீரகம் UAE நாட்டின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்தின் இயக்குனர் ஒமர் ஷராஃப் இந்தியாவின் ISRO அமைப்பை பெரிதும் மதிப்பதாக கூறினார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செயற்கைகோளான Nayif-1ஐ விண்ணில் ஏவ ISRO தான் உதவியது அந்த வகையில் செவ்வாய் கிரக ஆய்வு (EMM) திட்டத்தில் இணைந்து செயலாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது

ஆனால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் வரும் என நம்புவதாகவும் எப்போதுமே சர்வதேச அளவிலான ஒத்துழைப்பிற்கு தங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் எனவும் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த ஆய்வு திட்டத்தில் NASAவின் MAVEN திட்டமும் பங்கு வகிக்க உள்ளது, MAVEN வளிமண்டலத்தின் மேலடுக்கையும் EMM கீழ் அடுக்கையும் ஆய்வு செய்ய உள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது.