இந்தியாவுக்கான போர் கப்பல்களை ரஷ்யா சரியான நேரத்தில் டெலிவரி செய்யும் : அதிகாரிகள் !!

ரஷ்யாவில் இந்தியாவுக்கான இரண்டு தல்வார் ரக ஃப்ரிகேட் போர் கப்பல்கள் கட்டுபட்டு வருகின்றன.

தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் அதையொட்டி விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக இவற்றின் டெலவரி தாமதம் ஆகுமா எனும் கேள்வி எழுந்தது.

இதையொட்டி ரஷ்ய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் அதாவது திட்டமிட்டப்படியே இரண்டு போர்கப்பல்களும் சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என கூறியுள்ளனர்.

இந்திய கடற்படைக்காக வெளிநாட்டில் கட்டமைக்கப்படும் கடைசி கப்பல்கள் இவையாக தான் இருக்கும் என இந்திய கடற்படை மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.