போர் விமானங்களுக்கு பாதுகாப்பு துணிகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் !!

  • Tamil Defense
  • April 20, 2022
  • Comments Off on போர் விமானங்களுக்கு பாதுகாப்பு துணிகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் !!

மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் காம்கோவன் நகரத்தில் அமைந்துள்ள விகாம்ஷி ஃபேப்ரிக்ஸ் லிமிடெட் – VIKAMSHI FABRICS LIMITED மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய விமானப்படையின் சுகோய்-30 ரக விமானங்களுக்கான பாதுகாப்பு துணிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற நிலையில் மற்ற விமானங்களுக்கான பாதுகாப்பு துணிகளையும் தயாரிக்க உள்ளது.

இந்த பாதுகாப்பு துணிகளை கொண்டு வானூர்திகளின் முக்கிய இடங்களை ஏதேனும் உள்சென்று இன்ஜின் போன்றவற்றை பாதிக்காமல் பாதுகாக்கும் விதமாக முடி வைப்பார்கள் அத்தகைய துணிகளை தான் இந்த நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.

இந்த நிறுவனம் இந்திய விமானப்படையின் விமானங்கள் மட்டுமல்ல செயற்கைகோள்களுக்கான பாதுகாப்பு துணிகளை கூட தயாரித்து வழங்கியுள்ளது கூடுதல் சிறப்பு வாய்ந்த தகவல் ஆகும்.